கொடைக்கானல் செல்பவர்கள் கவனத்திற்கு.., மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த மழையானது தற்போது பெய்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், " கொடைக்கானலில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் போன்ற இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வேண்டாம். தொடர் மழை அறிவிப்பு வந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப்போன்று முதுமலை புலிகள் காப்பகமும் சுற்றுலா பயணிகள் வருகைக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில், புலிகள் காப்பகத்தில் 50 விழுக்காடு இருக்கையுடன் வாகன சவாரி தொடங்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kodaikanal Visited Peoples Restriction some Places due to Heavy Rain


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->