பாஜகவில் ஓபிஎஸ்? தனித்து போட்டி? அண்ணாமலைக்கு நெருக்கடி? பாஜக தரப்பில் பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலங்கியதால் அண்ணாமலைக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று, பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்து மறைந்த தமிழர் தந்தை ஆதித்தனார் ஐயா அவர்களின் 119 ஆவது பிறந்தநாளில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆண்டு தோறும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறது.

அதைப்போலவே எங்களுடைய மாநில தலைவர் மரியாதைக்குரிய அண்ணாமலை அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, இன்றைக்கும் எங்களின் கட்சியின் நிர்வாகிகள் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம்.

இந்த தமிழகத்திற்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, ஒரு பத்திரிகையின் வாயிலாக, அறிவொளி இயக்கம் நடத்துவதைப் போல, படிக்காத பாமரர்களையும் படிக்க வைத்த ஒரு மிகப்பெரிய பெருமையை ஐயா ஆதித்தனார் அவர்களுக்கு உண்டு.

தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் பெருமைப்பட வேண்டும் உயர வேண்டும் என்று வாழ்ந்தவர். ஆன்மீகம், விளையாட்டு, கல்வி என பல்வேறு துறைகளுக்கு அவர் அள்ளி வழங்கிய கொடை வள்ளல். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் உருவாக்கி, அவர்களுக்கெல்லாம் பயிற்சி அளித்து, பணியும் கொடுத்து இன்றைக்கு பத்திரிகை துறையில் தமிழகத்தை வளர்த்த பெருமையும் அவருக்கு உண்டு என்பதை சொல்லி, அவர் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும் என்று இந்த நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எங்களுடைய கருத்தினை பதிவு செய்கிறோம்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து, எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியது போல, தேசிய தலைமை கூறியதற்கு பிறகு நாங்கள் இது குறித்து பேசுவோம்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் அண்ணாமலைக்கு எந்த நெருக்கடியும் இல்லை. என் மண் என் மக்கள் யாத்திரை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகரித்து உள்ளது. அவருக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. ஒரு சிறப்பான தலைவர், சிறப்பான பணியை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்" என்றார்.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கரு. நாகராஜன், இது குறித்த தலைவர் தான் சொல்வார் என்றார்.

40 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடுமா? என்ற கேள்விக்கு, பொருத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karu Nagarajan say about ADMK BJP Alliance break Annamalai


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->