144 தடை! எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்! அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு காவிரியிலிருந்து நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நாளை (செப்.29) மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி இன்று (செப்.28) நள்ளிரவு 12 மணி முதல், நாளை (செப்.29) இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இதற்கிடையே, கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக பேருந்துகள், நாளை தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து கர்நாடகம் முழுவதும் பந்த் நடக்க உள்ள நிலையில், மாநில எல்லை வரை பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் நகரத்திற்கு செல்லும் பேருந்துகளை தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு மாநில எல்லைகளிலும் நிலவும் சூழ்நிலை கருத்தில் கொண்டு, பேருந்து சேவை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Cauvery Issue TamilNadu 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->