நகையை பாதுகாக்க அலறிய பெண்., குளத்தில் தள்ளவிட்டு கொலை.. கயவனை பிடித்து நொறுக்கியெடுத்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


செயின் பறிப்பில் ஈடுபட முயற்சி செய்கையில், கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் பூந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வரும் நிலையில், இவரது மனைவி மேரி ஜெயா. இவர் நேற்று காலை அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்று வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். 

இதன்போது, அங்குள்ள ஆணைக்குளம் பகுதியில் வரும் வேலையில், மெர்லின் ராஜா என்பவன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ஜெயாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளான். இதனை சற்றும் எதிர்பாராத ஜெயா அலறவே, இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த மெர்லின் ராஜா, தனது கூட்டாளிகளுடன் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அருகில் உள்ள குளத்தில் மேரி ஜெயாவை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இந்த சம்பவத்தில் மேரி ஜெயா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தின் போதே, மெர்லின் ராஜாவை விரட்டிப்பிடித்த பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மேரி ஜெயாவின்  உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த மெர்லினை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், விசாரணையில் இராணுவத்தில் பணியாற்றி வந்த மெர்லினின் மீது இராணுவ ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்து இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதும், இவனின் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari woman Murder during Robbery Police Investigation 8 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal