திடீரென உள்வாங்கும் கடல்.. அச்சத்தில் கன்னியாகுமரி மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. 

இதனிடையே கன்னியாகுமாரியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் நீர் உள்வாங்குவது, நீர் மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் நீர் நிறம் மாறுவது போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கன்னியாகுமரி கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகுதியில் கடல் நீர்மட்டம் திடீரென உள்வாங்கிய உள்வாங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

நேற்றும், இன்றும் என இரண்டு நாட்கள் நீர் மட்டம் உள்வாங்கியுள்ளது. இதனால், கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிகின்றன. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சிலர் கடலுக்குள் சென்று பாறைகள் மேல் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றன. இதனை கவனித்த கடலோர போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari sea level has receded


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->