கன்னியாகுமரி | 300 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி, கடற்கரை சாலை மற்றும் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமம் பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் போக்குவரத்துக்கும்  இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஆகியோர் நேற்று கன்னியாகுமரியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது கன்னியாகுமரி கடற்கரை சாலை மற்றும் முக்கடல் சங்கமிக்கும் பகுதிகளில் நடைபாதைகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இன்று காலையில் கன்னியாகுமாரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பலத்த பாதுகாப்புடன் வந்து நடை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். 

இதே போல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கடைகளும் அகற்றப்பட்டது. 

இந்த ஆக்கிரமிப்பு அகற்ற செயலானது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர். குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணையானைய நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

திடீரென கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari removal 300 encroachment shops


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->