சாப்பாடு தரமாட்டாங்க சார்.. மூணு நாளா பட்டினி இருக்குறேன் சார்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய தனியார் நிறுவனத்தின் கொடுமை.!
Kanyakumari Pudukkottai child rescue by Local Man Offence by Private Sales Company
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 18). கணபதி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில், குடும்ப வறுமை காரணமாக கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் தனியார் விற்பனை அங்காடியில் விளம்பரத்தை பார்த்து, அதில் விற்பனைப் பிரதிநிதியாக சேர்ந்துள்ளார்.
அவர்கள் தரும் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்வதே கணபதியின் வேலையாக இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பொருட்களை எடுத்துச் சென்று வீடு வீடாக விற்பனை செய்த நிலையில், அங்குள்ள தக்கலை பகுதியில் உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டில் பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

அவர்கள் பொருள் எதுவும் வேண்டாம் என கூறி அனுப்பி வைத்த நிலையில், அந்த சிறுவன் அழுதபடியே சென்றுள்ளார். சிறுவன் அழுதபடி செல்வதென்றால் மணிகண்டன் அவரிடம் விசாரணை செய்துள்ளார். அதன்போது வேலை செய்யும் இடத்தில் விற்பனை நடைபெற்றால் ஒரு வேளை உணவு மட்டுமே தருவதாகும், விற்பனை எதுவும் நடைபெறவில்லை என்றால் பட்டினி போட்டு விடுவதாகவும் கணபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 3 நாட்களாக நான் பட்டினி கிடக்கிறேன் என்றும் அழுதபடியே பசிக்கொடுமை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கணபதிக்கு வயிறார உணவளித்த மணிகண்டன், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இதனைப்போல 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பணியாற்றி வருவதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், சிறுவனுக்கு பணம் கொடுத்து சொந்த ஊருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தக்கலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari Pudukkottai child rescue by Local Man Offence by Private Sales Company