'கன்னியாகுமரி கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது; தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகிறது'; ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை பார்வையிட்டு முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் குளித்து மகிழ்கின்றனர். அத்துடன்,  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளில் பயணித்து, கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளூர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசிக்கின்றனர்.

திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த கண்ணாடி கூண்டு பாலத்தை தினமும் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்ற நிலையில், இந்த பலத்தில் தற்போது விருசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைத்து கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி தரை பலத்தை இது வரை சுமார் 17 லட்சத்தி 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்த்துள்ளனர். கண்ணாடி பலம் உறுதியாக உள்ளது. சிறப்பாக பராமரிக்க பட்டு வருவகிறது. 

கடந்த 16. 08.2025 அன்று பாலத்தை ஒப்பந்தர்கள் மூலம் பராமரிப்பு பணி நடந்த போது ஊழியர் கையில் இருந்த சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிதாக கீறல் ஏற்பட்டுள்ளளது. கீறலை சரிசெய்வதற்காக அதை மாற்றக்கூடிய பணிகள் நடைபெற்றுவருகிறது. கண்ணாடி கூண்டு பலத்தில் ஏந்த ஒரு பயமும்மின்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்லலாம் எனவும் தேவையற்ற வதந்திகள் பரப்பபடுவதாகவும் மாவட்டாட்சியார்  என்று ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari Glass Bridge is stable says District Collector Azhugumeena


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->