ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு எதிரெதிர் வேட்பாளராக மாமியார் - மருமகள்..! - Seithipunal
Seithipunal


ஒரேகிராம ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு மாமியார் - மருமகள் எதிரெதிர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இந்த ஊத்துக்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியானது பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், இதே கிராமத்தை சார்ந்த சாவித்ரி மணிகண்டன் என்ற 40 வயது பெண்மணி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து யார் போட்டியிடவுள்ளார் என்பதே தற்போது பெரும் வைரலாகியுள்ளது. 

சாவித்ரி மணிகண்டனை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அவரது சொந்த மாமியார். சாவித்ரி மணிகண்டனின் மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (வயது 61), ஊராட்சி மன்ற தலைவராக சாவித்ரி மணிகண்டனை எதிர்த்து களம்காண்கிறார். 

இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்ய புறப்பட்டு, ஒரே நேரத்தில் அலுவலகத்திற்கு வந்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஒரே குடும்பத்தினர் சார்ந்த மாமியார் - மருமகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள சபாஷ் சரியான போட்டி என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Walajabad Uthukadu Village President Election Mother in Law and Daughter in Law Opp Candidates


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->