காஞ்சிபுரம்: கடன் தொகையை செலுத்த கூறி நெருக்கடி தந்த டி.வி.எஸ் கிரெடிட் நிதி நிறுவனம்.. மாற்றுத்திறனாளி விவசாயி விஷமருந்தி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


டி.வி.எஸ் கிரெடிட் சர்விஸ் நிறுவனத்தின் தொல்லை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வில்லிவலம் கிராமத்தை சார்ந்தவர் மனோகரன். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். விவசாயியாக வாழ்ந்து வந்த மனோகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. விவசாய தேவைக்காக மனோகரன் கடந்த 2019 ஆம் வருடம் TVS Credit Service என்ற தனியார் நிறுவனத்தில் ரூ.2,11,784 கடன் பெற்றுள்ளார். மனோகரன் மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால், ஜாமினில் இராமகிருஷ்ணன் என்பவரின் பெயருக்கு கடன் தொகை மாற்றப்பட்டுள்ளது. 

கடன் தொகையில் ரூ.1,68,354-ஐ மனோகரன் திருப்பி செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள கடன் தொகையான ரூ.43,380 நிலுவை தொகையாக இருந்துள்ளது. இந்த நிலுவை தொகையை வசூல் செய்ய TVS Credit Service நிறுவனத்தை சார்ந்த ஊழியர்கள், மனோகரனின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். மேலும், ஜாமின் கையெழுத்திட்ட இராமகிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கும் சென்று மிரட்டி இருக்கின்றனர். 

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய மனோகரன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அவகாசம் கேட்டு கெஞ்சி இருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம் மீண்டும் வீட்டிற்கு ஆட்களை விட்டு மிரட்டவே, பயந்துபோன மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்யாத காரணத்தால், மீண்டும் நிதி நிறுவனத்திடம் அவகாசம் கேட்டுள்ளார். 

இந்த சூழலில், மனோகரனின் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, வறுமையில் வாடிய மனோகரன் கடன் தவணை தொகையை செலுத்த இயலாமல் தவித்துள்ளார். 3 மாதமாக தவணையை செலுத்தாமல் இருந்ததால், நிதி நிறுவன ஊழியர்கள் பல்வேறு விதமாக நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும், வீட்டிற்கு நேராக சென்று கிராம மக்கள் முன்னிலையில் மனோகரனை அவமானப்படுத்தி இருக்கின்றனர். 

இதனையடுத்து, கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய மனோகரன், நிதி நிறுவன வாயிலில் நின்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மனோகரனின் தற்கொலைக்கு நிதி நிறுவனமே முழு காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விஷயம் தொடர்பாக மனோகரனின் உறவினர்கள் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து TVS Credit நிதி நிறுவன ஊழியர்களான அமர்நாத், கிருஷ்ணா, சரத் குமார், கார்த்திக் ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Physically Challenged Farmer Manokaran Suicide In front of TVS Credit Service Office Loan Pay Torture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->