கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை.. கமல்ஹாசன்.!! - Seithipunal
Seithipunal


கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1946ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் 'கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர்.  உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal haasan wish for kamarajar birthday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->