மீண்டும் வெளிநாடு புறப்பட உள்ள கமல்ஹாசன்!  - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் அரசியல் மட்டுமல்லாமல் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

கமலஹாசன் நடிப்பில் உருவாகும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுவதால் அதிலும் பங்கேற்று வருகின்ற மக்களவைத் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். 

கடந்த 19ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமலஹாசன் கடந்த  21ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழாவை கலந்து கொண்டார். 

அப்போது, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் நல்ல செய்தி வெளிவரும் எனவும் அறிவித்தார். 

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே கமலஹாசன் மீண்டும் வருகின்ற 29ஆம் தேதி வெளிநாடு செல்ல உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதற்குள் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான இடம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan travel abroad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->