நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவியின் விபரீத முடிவு! கதறும் பெற்றோர்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் விவசாயி. இவரது மகள் பைரவி (வயது 18) இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு எழுதினார். 

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பைரவி கடந்த வாரம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வயிற்று வலி என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து பெற்றோர் மாணவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து வயிறு வலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மாணவி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து அரசு மருத்துவமனையின் முன்பு மாணவியின் உறவினர்கள் அதிக அளவில் திரண்டதால் மருத்துவமனையின் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi NEET exam Low score Student suicide


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->