சென்னையில்  MG வின்ட்சர் PRO-காரை அறிமுகப்படுத்தியது JSW நிறுவனம்! - Seithipunal
Seithipunal


JSW எம்ஜி மோட்டார் இந்தியா, இன்று, புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய எம்ஜி விண்ட்சர் புரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் புதிய 52.9 கிலோவாட் மணிநேர பேட்டரி தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது வணிக வகுப்பு (Business class) பயண அனுபவத்தை மேம்படுத்தும். எம்ஜி விண்ட்சர் அறிமுகமான நாள் முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் PRO தொடரின் சேர்க்கை அதன் சந்தை செயல்திறனை மேலும் வலுப்படுத்தும்.

எம்ஜி Windsor PRO அறிமுகம் குறித்து, JSW எம்ஜி மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், அனுராக் மெஹ்ரோத்ரா பேசுகையில், "எம்ஜி விண்ட்சர் இந்தியாவின் 4W-EV பிரிவின் வளர்ச்சியை முன்னேற்றுவதில்) முக்கிய பங்கு வகித்துள்ளது, அதன் கவர்ச்சிகரமான மதிப்பு முன்மொழிவுகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன. ஆரம்ப காலத்தில் விண்ட்சரின் வாடிக்கையாளர்கள் தெரிவித்த நல்ல கருத்துக்களும் பரிந்துரைகளும் மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை உருவாக்கியது, பெருநகரங்களுக்கு அப்பால் டயர் II மற்றும் III சந்தைகளுக்கும் அதனை பற்றிய நல்ல செய்தியை பரவ செய்தது. பாரம்பரியத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் புதிதாக கார் வாங்குபவர்களுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளோம். எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து, சரியான நேரத்தில் சரியான தொழில்நுட்பத்துடன் புதுமைகளை வழங்குவதன் மூலம் இந்திய வாகனத் துறையை மறுவரையறை செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

JSW company launched the MG Windsor PRO car in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->