ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2 வது நாளாக தொடரும் விசாரணை! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இரண்டாவது நாளாக தனி படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோயம்புத்தூர், காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கடந்த 27ஆம் தேதி 200 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இது குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு பகுதி, பொள்ளாச்சி பகுதிகளிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.  

இந்த விசாரணையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு கடையில் பதிவாகியுள்ள கைரேகைகள் போன்றவற்றை சேகரித்து விசாரணை நடத்திய பொழுது குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளிகள் கிடையாது என தெரிய வந்துள்ளது. 

மேலும் நகைகளை தேர்வு செய்து திருடி இருப்பதால் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புதிய கொள்ளையராக இருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக தனிப்படை போலீசார் கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jose Alukas Jewellery Investigation continues for 2nd day


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->