ஜெயலலிதாபிறந்த நாள் விழா கைப்பந்து போட்டி..மதுரவாயல் தெற்கு தொகுதி அதிமுக உற்சாகம்!
Jayalalithaas Birthday Volleyball Tournament Maduravoyal South constituency AIADMK
ராமாபுரம் அருகே மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்கள் பரிசுகளை வாங்கி பாராட்டினார்.
தமிழகம் முழுவதும் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது . இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா மதுரவாயில் தெற்கு தொகுதி அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஜெயலலிதாவின்உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னதாக மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது .ராமாபுரம் அரசமரம் அருகில் நடந்த இந்த கைப்பந்து போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வாங்கி பாராட்டினார் .

மதுரவாயில் தெற்கு தொகுதி அதிமுக பகுதி செயலாளர் தாமோதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் வீரர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.முன்னதாக அம்மாவின் திரு ஒரு படத்திற்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மதுரவாயல் தெற்கு தொகுதி 155 வது வட்ட அதிமுக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன் சிறப்பாக செய்திருந்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் ஆனந்த்ராஜ் மற்றும் மதுரவாயில் தெற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
English Summary
Jayalalithaas Birthday Volleyball Tournament Maduravoyal South constituency AIADMK