தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறையா.? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் முன்கூட்டியே விடுமுறை விடப்படுகின்ற அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் வெளியாக போவதாக தகவல் கசிந்தது.

இதை அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இத்தகைய நிலையில், செவ்வாய் கிழமை காணும் பொங்கலை கொண்டாடிய பொதுமக்கள் பலரும் ஒரே நாளில் சென்னைக்கு திரும்புவது சாத்தியம் இல்லாத விஷயம்.

ஆகவே, புதன்கிழமை விடுமுறை வேண்டும் என்ற பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் இருந்தன. இதனை தொடர்ந்து நேற்று முதல் விடுமுறை குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. பொதுமக்களின் வசதிக்காக அரசு புதன்கிழமையும் விடுமுறை அளித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த தகவலை மீண்டும் தமிழக அரசு சார்பில் மறுத்துள்ளனர்.

விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, 4 நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு நாளுக்கு விடுமுறை கொடுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும், இன்று வழக்கம்போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

January 18 no holiday for school and colleges


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->