'ஆணையம் மீது நம்பிக்கை போச்சு'...! புதிய நடுவர் மன்றமே கர்நாடகாவிற்கு பதிலடி...! - சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்...!
new arbitration panel answer Karnataka Minister Adhav Arjuna explanation opposition parties Assembly
மேகதாது அணை விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், குடிநீர் தேவையை காரணமாகக் கொண்டு கர்நாடகா புதிய அணை கட்ட முயற்சிப்பது எதிர்காலத்தில் தீவிர சட்ட சிக்கல்களை உருவாக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டசபையில் விரிவாக தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"குடிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களை கவனிக்க காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில், குடிநீர் தேவையை காரணமாக முன்வைத்து மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
குடிநீர் தேவைக்காக அணை கட்டப்படுகிறது என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அதன் பின்னணியில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக மேகதாது அணை கட்டுமானத்திற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருவது தமிழகத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழகத்திற்கு இருந்த நம்பிக்கை பெருமளவில் சிதைந்துள்ளது.சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது போல, இந்த பிரச்சினைக்கு புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சரியான மற்றும் வலுவான தீர்வாகும்.
குடிநீர் பங்கீடு தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அணை கட்டுமானத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள தனி அமைப்பு அவசியமாகிறது.
கர்நாடக அரசின் வியூகத்திற்கு எதிரான தமிழக அரசின் மிக முக்கியமான பதிலடி வியூகமே புதிய நடுவர் மன்றம் அமைப்பது. இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கினால், தமிழகத்திற்கு தேவையான கால அவகாசம் கிடைப்பதுடன், மாநிலத்தின் உரிமைகளை சட்டரீதியாக மேலும் உறுதியாக நிலைநிறுத்தும் வாய்ப்பும் உருவாகும்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் நீர்வள உரிமைகளையும் பாதுகாக்க இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
English Summary
new arbitration panel answer Karnataka Minister Adhav Arjuna explanation opposition parties Assembly