அரசியல் வேறு... அரசு வேறு...! புதிய நடுவர் மன்ற விவகாரத்தில் எழும் விமர்சனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்...!
Politics different Government is different Minister Thangam thennarasu slams criticisms over new arbitration
மேகதாது அணை விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் தீவிர கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், புதிய நடுவர் மன்றம் அமைப்பதே தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் உறுதியான வழி என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில் செய்யப்பட்ட திருத்தம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"மேகதாது அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினையில், தமிழகத்தின் நியாயமான உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை அப்போதைய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம்.கர்நாடகாவில் பாஜகவோ, காங்கிரஸோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற பிடிவாத நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர்.
கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கே நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
இது ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல; தமிழக அரசின் ஒட்டுமொத்த நிலைப்பாடாகும்.அணை கட்டுமானத்தை சட்டரீதியாக தடுக்க புதிய நடுவர் மன்றம் அவசியம் என சட்ட வல்லுநர்களும் தெளிவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விவசாய மக்களின் நலனும், தமிழகத்தின் நீர்வள உரிமையும் தொடர்புடைய இவ்விஷயத்தில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது ஏற்றதல்ல.காவிரி நதிநீர் பங்கீட்டில் தற்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் மேகதாது அணை விவகாரத்தில் எதிர்கால சிக்கல்களை தவிர்க்கவும், தமிழகத்தின் உரிமையை உறுதியாக நிலைநிறுத்தவும் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே ஆக்கப்பூர்வமான மற்றும் சிறந்த தீர்வாக இருக்கும்" என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
English Summary
Politics different Government is different Minister Thangam thennarasu slams criticisms over new arbitration