திருமணம் செய்வதாக கூறி பலமுறை உறவு கொண்ட சிறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.!
Jail warden cheat women punishment of 10 years Jail
திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி பலமுறை உறவு கொண்ட சிறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உறவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தியமூர்த்தியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சத்தியமூர்த்தி பெற்றோர் அந்த பெண்ணை சாதியின் பெயரை கூறி இழிவாக திட்டியுள்ளனர்.
இதனையடுத்து அப்பெண் சத்தியமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சத்தியமூர்த்தி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், சத்தியமூர்த்திக்கு 21,000 ரூபாய் அபராதமும் அவரது பெற்றோருக்கு 10,000 ரூபாய் ஆப்ரகமும் வைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
English Summary
Jail warden cheat women punishment of 10 years Jail