சுதந்திர போராட்ட வீரர் திரு.பால கங்காதர திலகர் அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என வீரமுழக்கமிட்ட' சுதந்திர போராட்ட வீரர் திரு.பால கங்காதர திலகர் அவர்கள் நினைவு தினம்!.

 விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.

 இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.

 ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார்.

 முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று மறைந்தார்.

திருமதி.கமலா நேரு அவர்கள் பிறந்ததினம்!.


பண்டித ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் திருமதி.கமலா நேரு அவர்கள் பிறந்ததினம்!.

 கமலா நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936) என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார்.

 கமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். அவர் பழைய டில்லியில் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிகாட்டுதலின் மூலம் கல்வி பெற்றார்.

 இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டது.

 கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும், பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

 கமலா நேரு 1936, பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று காச நோய் பாதிப்பால் சுவிஸ்சர்லாந்திலுள்ள லாசன்னில் காலமானார். லாசக்னா இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the remembrance day of the freedom fighter Mr Bal Gangadhar Tilak


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->