ஐயா திரு.எம்.சி.ராஜா அவர்களின் பிறந்ததினம்!.
It is the birthday of Mr M C Raja
இந்தியாவில் சமூகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான புரட்சியாளர் ஐயா திரு.எம்.சி.ராஜா அவர்களின் பிறந்ததினம்!.
ராவ் பகதூர் எம் சி. ராஜா என அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா (ஜூன் 17, 1883 – ஆகஸ்ட் 20, 1943) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பட்டியல் இன அரசியல்வாதியும், சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். பி. ஆர். அம்பேத்கருக்கு முன்பே அகில இந்திய அளவில் பட்டியல் பிரிவு (SC) மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.
சென்னை மாகாண சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியல் சமூக உறுப்பினர் ராஜாதான். 1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆதி திராவிடர் என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

எம். சி. ராசா பல பள்ளிப் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் ஆர். ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து கிண்டர்கார்டன் ரூம் (Kindergarten Room) என்ற தலைப்பில் மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் மூன்றாம் பதிப்பு 1930 ஆம் ஆண்டில் வெளியானது. இந்நூலில் குறிப்பாக ‘கை வீசம்மா கைவீசு’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘அகத்திக்கீரைப் புண்ணாக்கு’, ‘நிலா நிலா ஓடிவா', 'காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா!' போன்ற பல மழலைப் பாடல்களை இயற்றி வெளியிட்டுள்ளார்.
English Summary
It is the birthday of Mr M C Raja