கடும் துப்பாக்கி சண்டை..நக்சலைட்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படை தீவிரம்!  - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கார் மாநிலத்தில் பாதுகாப்பு படைகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள்  நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்கு பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது, நக்சலைட்களை ஒழிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது, இதனால் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் வேட்டையை தொடங்கியுள்ளனர். சமீபகாலமாக ஏற்பட்ட சண்டையில்  பல நக்சலைட்டுகள்  கொல்லப்பட்டனர். பல நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர் .

இந்த நிலையில்சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மாவட்ட ரிசர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்டோர் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் இன்று ஈடுபட்டனர்.

அப்போது நக்சலைட்டுகள், படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். படையினரும் பதிலடி கொடுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இந்தநிலையில் நக்சலைட்டுகளின் ஒழிப்பு முயற்சிகளில் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் ஈடுபட்டு வருகின்றன என ஐ.ஜி. சுந்தர் ராஜ் கூறியுள்ளார். சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சீருடையில் இருந்த 4 நக்சலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intense gunfight Security forces intensify efforts to suppress insurgents


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->