இன்ஸ்டாகிராம் விவகாரம் விபரீதம்...! பெண்ணை தாக்கிய இளைஞர் கைது...!
Instagram incident goes awry Youth arrested attacking woman
சென்னை திருவொற்றியூரில், சமூக வலைதளத்தில் ஏற்பட்ட சிறிய தவறான புரிதல் வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதுடன், அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 11ஆம் தேதி மாலை, வேலை நேரத்தில் இருந்த அந்த பெண்ணை அணுகிய இளைஞர் ஒருவர், தன்னிடம் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறி வாக்குவாதத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலளித்த அந்த பெண், தமக்கு செல்போன் பயன்படுத்தத் தெரியாது என்றும், குழந்தைகள் தவறுதலாக செய்திகளை அனுப்பியிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.ஆனால், அந்த விளக்கத்தை ஏற்காத இளைஞர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சூழ்நிலை பதற்றமாக மாறியது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர், அந்த பெண்ணை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவொற்றியூர் காவலர்களிடம் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணின் செல்போனிலிருந்து குழந்தைகள் தவறுதலாக இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவொற்றியூரைச் சேர்ந்த நரேஷ் (26) என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட சிறிய தவறான புரிதல் கூட எவ்வாறு வன்முறையாக மாறுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
English Summary
Instagram incident goes awry Youth arrested attacking woman