இஸ்லாமியர்கள் திமுகவிற்கு ஏன் வாக்களிக்க கூடாது?! ஈரோட்டில் புயலென கிளம்பிய இஸ்லாமிய கட்சி தலைவர்!
INLK Election Campaign in erode east
இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு இன்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
அந்த துண்டு பிரசுரத்தை விவரம் பின்வருமாறு :
முஸ்லிம் ஓட்டு யாருக்கு?
பாஜக நமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரி என்றால்! திமுக நமது முஸ்லிம் சமூகத்திற்கு துரோகி ?
கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு எதிரான ஹிஜாப் பிரச்சினை தீ பற்றி எரிந்த போது திமுக அமைதி காத்தது..
ததஜ நிர்வாகிகள் மீது திமுக அரசு வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தது அதே வழக்கில் கர்நாடக போலீஸிடம் ததஜ நிர்வாகிகளை ஓப்படைத்தது ஏன் ?
ஆம்பூர் பிரியாணி விழாவில் பீப் பிரியாணியை அனுமதிக்க கூடாது என இந்து மக்கள் கட்சி கோரிக்கையை ஏற்று பீப் பிரியாணி திருவிழாவை ரத்து செய்தது திமுக அரசு
ஆர்எஸ்எஸை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் சசிகுமார் கண்ணன் ஆகியோரை விடுதலை செய்த திமுக அரசு 39 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது ஏன் ?
பாஷா பாய் அவர்களுக்கு இரண்டு கண்களும் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க பரோல் என்கிற விடுப்பு கொடுக்காமல் திமுக அரசு வஞ்சித்து வருவது ஏன் ?
ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என அரசு மருத்துவர்கள் கூறிய பிறகு தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க தடா புகாரிக்கு பரோல் என்கிற விடுப்பு திமுக அரசு வழங்காதது ஏன் ?
மூளையில் கேன்சர் கட்டி வந்து ஆபாத்தான நிலையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக சிறையில் இருந்து வரும் என் எஸ் ஹக்கீம் அவர்களை பரோல் என்கிற விடுப்பு திமுக அரசு வழங்காதது ஏன்?
2009 திமுக ஆட்சியில் கட்டாய பதிவு திருமண சட்டத்தின் மூலம் பொது சிவில் சட்ட வரைவு திட்டத்தை திமுக அரசு ரத்து செய்யாதது ஏன்?
தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணியிலான காங்கிரஸ் கை சின்னத்திற்கா உங்க ஓட்டு ?
முஸ்லிம் சமூகமே! எதிரிகளை விட துரோகிகளை ஒழித்து கட்டுவோம்!!
உங்க ஓட்டு திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் உங்க வாக்கு திமுக கூட்டணி கை சின்னத்திற்கு எதிராக வாக்களியுங்கள்..
சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

English Summary
INLK Election Campaign in erode east