தாமரையில் களமிறங்கும் டிடிவி.. எந்த தொகுதி தெரியுமா? காரணமோ வேற லெவல்.!! - Seithipunal
Seithipunal


பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன்! 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து எதிர்வரும் மக்களவைப் பொறுத்து தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பாஜகவுடன் நிபந்தனையற்ற கூட்டணிக்கு ஒத்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பாஜக உடனான தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2024 மக்களவைத் தேர்தலில் 2019ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்ற தேனி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு மேலும் 2 தொகுதிகள் என மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது.

இதற்கு காரணம், பாஜக தேர்தலுக்குப் பின் அதிமுகவில் ஒரு பிளவை உருவாக்கி, அதிமுகவை தன்னிடம் ஒப்படைக்கும் என்ற கனவோடு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம்  ஓபிஎஸ் மற்றும் பாஜகவுடன் உடன் இணைந்தால் தான் இதை செய்ய முடியும் டிடிவி நம்புவதாகவும் தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info TTV contest Theni constituency in BJP Lotus symbol


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->