சவுக்கு சங்கர் சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியதா.!! வெளியான பரபரப்பு தகவல்.!!
Info savukku Shankar travelled police vehicle get into an accident
பிரபல பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகர்மான சவுக்கு சங்கர் காவல்துறையின் உயர் அதிகாரிகளையும், பெண் காவல் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியதாக கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் தேனியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சவுக்கு சங்கர் நடத்தி வரும் சவுக்கு மீடியாவில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Info savukku Shankar travelled police vehicle get into an accident