செல்வாக்கு சரிந்தது...பதவியும் பறிபோனது...! - தமிழகத் தேர்தலில் தோற்றுப்போன அமைச்சர்கள் யார் யார்...?
Influence declined and lost their positions Who ministers who lost Tamil Nadu elections
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்து, நேற்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, புதிய ஆட்சியை அமைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
இதேவேளை, ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கணிசமான பின்னடைவை சந்தித்து, அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து வெறும் 73 இடங்களையே கைப்பற்றியுள்ளது. மறுபுறம், அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது நிலையைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்த தேர்தல் முடிவுகள் பல அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. அதில் முக்கியமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் தோல்வியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 16 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற முடியாமல் பின்னடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.தோல்வியை சந்தித்த முக்கிய அமைச்சர்களின் பட்டியல் வருமாறு:
மு.க. ஸ்டாலின் – கொளத்தூர்
ஆர். காந்தி – ராணிப்பேட்டை
டி.ஆர்.பி. ராஜா – மன்னார்குடி
முத்துசாமி – ஈரோடு மேற்கு
மா. சுப்பிரமணியன் – சைதாப்பேட்டை
ராஜேந்திரன் – சேலம் வடக்கு
துரைமுருகன் – காட்பாடி
தியாகராஜன் – மதுரை மத்திய
கீதா ஜீவன் – தூத்துக்குடி
மூர்த்தி – மதுரை கிழக்கு
நாசர் – ஆவடி
அன்பில் மகேஷ் – திருவெறும்பூர்
மதிவேந்தன் – ராசிபுரம்
இந்த தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்களுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றன.
English Summary
Influence declined and lost their positions Who ministers who lost Tamil Nadu elections