இந்தியப் பாரம்பரிய கணிதத்துக்கு உலக அங்கீகாரம்!
Indian traditional mathematics receives global recognition
கொரியாவின் சியோலில் நடைபெற்ற 9வது கிழக்கு ஆசிய பிராந்திய கணிதக் கல்வி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய கணித முறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்த வெற்றி, கணிதக் கல்வியில் இந்தியாவின் தொன்மை அறிவை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும்.
இந்தியாவின் பாரம்பரிய கணித முறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கொரியாவின் சியோலில் நடைபெற்ற 9வது கிழக்கு ஆசிய பிராந்திய கணிதக் கல்வி மாநாட்டில் (EARCOME 9) இந்தியா முதல்முறையாகப் பங்கேற்றது.
ஆரோவில்லின் ஸ்ரீ அரவிந்த சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (SAIIER) மற்றும் ஆரோவில் பள்ளி இணைந்து சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன் (SAIIER தலைவர்) மற்றும் ஆசிரியை பூவிழி ஆகியோர் இதைச் சமர்ப்பித்தனர்.

"இந்திய அறிவு முறைகள்: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கணித அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம்" என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, பாரம்பரிய கணித முறைகள் மாணவர்களின் புரிதலையும் ஆர்வத்தையும் எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதை நிரூபித்துள்ளது. குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி இத்திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். இந்த வெற்றி, கணிதக் கல்வியில் இந்தியாவின் தொன்மை அறிவை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும்.
English Summary
Indian traditional mathematics receives global recognition