இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இன்று முதல் ஏ.டி.எம். கட்டண விதிமுறைகளில் மாற்றம்!
Indian Bank ATM card
ஏ.டி.எம். கட்டண விதிமுறைகளில் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியன் வங்கி ஜூலை 1 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்தவுள்ளது.
தற்போது, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியின் ஏ.டி.எம்.க்களில் மாதத்திற்கு 5 முறை, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.க்களில் பெருநகரங்களில் 3, கிராமப்புறங்களில் 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.
இந்த வரம்பை மீறும் பரிவர்த்தனைக்கு தற்போது ₹21 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகின்றது (மொத்தம் ₹24.78). ஜூலை 1 முதல் இது ₹23 + ஜிஎஸ்டி ஆக மாற்றப்படவுள்ளதாக எஸ்.எம்.எஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பணம் இல்லாத சேவைகளுக்கு ₹11 + ஜிஎஸ்டி (மொத்தம் ₹12.98) வசூலிக்கப்படும்.
பிற வங்கிகளின் ஏ.டி.எம்.க்களில் பணம் எடுத்தால், உங்கள் வங்கி அந்த வங்கிக்கு சேவை கட்டணம் செலுத்தவேண்டும் என்பதால் இந்த கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
சில தனியார் வங்கிகளும் ஜூலை 1 முதல் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இதற்கிடையே, கனரா வங்கி, சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது.