இந்தியா 101-வது ராக்கெட்டை மே-18-இல் விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ தலைவர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியா 101-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி.,சி.61 எதிர்வரும் மே 18-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. பூமி தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்புவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி கூறியதாவது:- மே 18-ஆம் தேதி இந்தியா 101-வது ராக்கெட்டை ஏவுகிறது எனவும், நாம் முதலில் 1979-ஆம் ஆண்டு எஸ். எல். வி. 03 ராக்கெட்டை அனுப்பினோம் அது 98 சதவீதம் வெற்றி அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், பி.எஸ்.எல்.வி.,சி. 61 ராக்கெட் வரும் மே 18-ஆம் தேதி பூமி தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்புகிறோம் என்றும்,  பூமியில் இருப்பது எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. நமது செயற்கைக்கோள் அனைத்தும் நன்றாக வேலை செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா தற்போது வளர்ச்சி அடைந்த நாடாக மாறியுள்ளது என்றும் நாம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுவது கிடையாது எனவும் நமது மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நமது மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தான் நாம் ராக்கெட்டை அனுப்புகிறோம் என்றும், இஸ்ரோ அனுப்பிய 50 செயற்கை கோள்கள் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் நாராயணன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India to launch 101st rocket on May 18 ISRO chief announces


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->