ஒரே நேரத்தில் அதிரடி காட்டும் ஐ.டி, இ.டி.!
income tax and enforcement department raide in chennai
சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில், புரசைவாக்கம் பகுதியில் உள்ள டி.வி. எச் லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அந்த குடியிருப்பில் நான்காவது மாடியில் வசிக்கும், அரசு ஒப்பந்தங்களுக்கு மின் சாதனங்களை விநியோகிக்கும் "அமித்" என்பவரின் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஜெயின் வில்லா அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
income tax and enforcement department raide in chennai