திருட்டு சக்தியை பெற கட்டிங் போட்ட திருடன்.. போதை ஏறி உறங்கியதால் குண்டுக்கட்டாக தூக்கி சென்ற காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் இருக்கும் வச்சகாரப்பட்டி பகுதியில் காவல்துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நேரத்தில்., அங்குள்ள பெருமாள் கோவில் பகுதியில் போதை மயக்கத்தில் மயங்கிய நிலையில் ஒருவர் இருந்துள்ளார். இவரின் அருகே இரும்பு கம்பி மற்றும் டார்ச் லைட் இருந்துள்ளது. 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை அலேக்காக தூக்கிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று., மயக்கத்தில் இருந்து தெளிந்ததும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த விசாரணையில்., தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் தத்தனேரி காலனி பகுதியை சார்ந்த செந்தூர்பாண்டி (வயது 55) என்றும்., தான் கட்டிட தொழிலாளியாக  பணியாற்றி வருவதாகவும்., தனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

மேலும்., தற்போது கட்டிட தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில்., திருட்டு தொழிலை கையில் எடுத்து புது யுக்திகளை உபயோகம் செய்ய முடிவு செய்துள்ளார். இவரின் திட்டப்படி வீடுகளுக்கு சென்று திருடாமல்., கோவில்களை நோட்டமிட்டு வந்துள்ளார். மேலும்., இவர் கடந்த 2001 ஆம் வருடம் முதல் திருடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

police,

இவர் திருட திட்டமிட்டுள்ள கோவில்களில் பகல் வேளைகளில் சென்று நோட்டமிட்டு., இரவு வேளைகளில் நகை., பணம் மற்றும் பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அங்குள்ள புலிக்குத்தி கிராமத்தில் இருக்கும் சிவன்கோவிலில் உண்டியல் திருடுபோனதற்கு இவர்தான் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில்., சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆவலில்., இங்குள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் இருக்கும் கோவிலை நோட்டமிட்டு வந்த நிலையில்., பெருமாள் கோவிலில் திருட திட்டமிட்டு., திருடுவதற்கு முன்னதாக மது அருந்திய நிலையில்., கோவில் வளாகத்திற்கு வந்த பின்னர் மது போதை அதிகமாகி உறங்கியதால் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டுள்ளான். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in viruthunagar thief arrested by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->