விருதுநகரில், 8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. விசாரணையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் உள்ள கொங்கலாபுரம் எனும் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி, அதே ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, விளையாடச் செல்வதாகக் பெற்றோர்களிடம் கூறிவிட்டு வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பின் நீண்ட நேரமாக சிறுமி வீடு திரும்பவில்லை, இதையடுத்து பெற்றோர் சிறுமியை பல இடத்தில் தேடிப் பார்த்துள்ளனர். சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, காலை அங்குள்ள முட்புதரில் காயங்களுடன் சிறுமியின் உடல் ஆடைகள் கிழிந்து இருந்ததை பார்த்து அந்த வழியே சென்றவர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இது தொடர்பான விசாரணையில், சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியான நிலையில், இப்பகுதியில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தை சார்ந்த 3 பேர் மற்றும் உள்ளூர் நபர்கள் 6 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in viruthunagar child girl gang rapped and murder investigation


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal