திணறும் மாவட்டம்.. மிரட்டும் டெங்கு..! பீதியில் திகைக்கும் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வேலூர் மாவட்டத்தில் சுமார் 348 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில்., இந்த வருடத்தின் தற்போது 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் காவேரிப்பாக்கம் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., வேலூர் மாநகராட்சியில் 123 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் 13 அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தமாக இவற்றின் கூட்டுத் தொகையில் 1,000 படுக்கைகள் மட்டுமே தற்போது உள்ளது. 

hospital,

இந்த படுக்கைகளில் பிரசவ வார்டுக்கு போக மீதமுள்ள 700 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில்., தற்போது 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மருத்துவமனையில் போதிய இடம் இல்லாதது பெரும் கவலையை அளித்துள்ளது. 

மாவட்ட சுகாதாரத் துறையினர் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில்., அங்குள்ள மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். 

பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி., அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் தருணத்தில்., அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் அல்லது வீட்டில் உள்ள நபர்கள் மெத்தனமாக இருந்தால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore peoples affected by dengue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->