மது விருந்திற்கு அழைத்து உட்கட்சி நபரையும்., எதிர்க்கட்சி நபரையும் கொலை செய்த திமுக நிர்வாகி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் அருகேயிருக்கும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு உள்ள இருக்கூர் ஊராட்சியில் கடந்த டிசம்பர் மாதத்தின் 27 ஆம் தேதியன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருந்தது. 

இந்த தேர்தலில் அங்குள்ள இரண்டாவது வார்டில் சுப்பையாம்பாளையம் பகுதியை சார்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவியான ராஜாமணி தேர்வு செய்யப்பட்ட நிலையில்., இதனைப்போன்று ஆறாவது வார்டில் இருகூரை சார்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சத்யாவும் போட்டியின்றி தேர்வானார். 

இந்த நிலையில்., ஆறுமுகம் முன்னதாகவே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி வகித்த காரணத்தால்., தனது மனைவியை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு கூறி செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். 

election,

இந்த விசயத்திற்கு செந்தில்குமார் மறுப்பு தெரிவிக்கவே., கடுமையான ஆத்திரமடைந்த செந்தில்குமார் பயங்கர திட்டமொன்றை தீட்டியுள்ளார். இவரது திட்டப்படி கடந்த 30 ஆம் தேதியன்று ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் சரவணன் என்பவருடன் சேர்ந்து செந்தில்குமார் அவரது நண்பர் தியாகராஜனை மது அருந்த அழைத்துள்ளார். 

இவர்களின் அழைப்பை ஏற்று வந்த இருவரும்., மதுவில் விஷம் கலந்திருப்பதை அறியாமல் குடித்துவிட்டு அங்கேயே மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்., இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

crime,

இந்த விசாரணையில் இவர்கள் இருவரும் இறந்ததை அடுத்து கொலை வழக்காக வழக்குப்பதிவு செய்த நிலையில்., தலைமறைவாக இருந்த சரவணன் மற்றும் ஆறுமுகத்தை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் பலியான செந்தில்குமார் தியாகராஜன் அதிமுக கட்சியை சார்ந்தவர் என்பதும்., ஆறுமுகம் திமுக கட்சியை சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in vellore murder case police investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->