கல்குவாரியில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமி விசாரணையில்., அதிர்ந்து போன காவல்துறை.! காதலன் வெறிச்செயல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரியூர் குப்பம் பகுதியை சார்ந்தவர் சரவணன். இவரது மகளின் பெயர் நிவேதா (வயது 17). இவர் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று முடித்த நிலையில்., வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இருக்கும் கேண்டினில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 ஆம் தேதியன்று வழக்கம்போல பணிக்கு சென்ற நிலையில்., மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இவரை காணாது தேடியலைந்த பெற்றோர் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும்., இவர் காணாமல் போன நாளின் காலை 11 மணியளவில் அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனையும் காவல் துறையினரிடம் பெற்றோர்கள் தெரிவித்த நிலையில்., தனது மகளின் இடதுகை பெருவிரலில் ஸ்டார் பச்சையும்., வலதுகையில் பறவை இறக்கை போன்று பச்சை குத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

vellore girl murder,

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., புதுவசூர் பகுதியில் இருக்கும் கல்குவாரியில் நிவேதா பிணமாக இருந்துள்ளார். பெண்ணின் சடலத்தை கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலமாக கிடந்த பெண் நிவேதா என்பதை அறிந்துள்ளனர். மேலும்., சம்பவ இடத்தில நிவேதாவுடைய அலைபேசி மற்றும் பைகள் இல்லாத நிலையில்., இதனை மர்ம நபர்கள் எடுத்துச்சென்று இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். 

இது தொடர்பான விசாரணையில்., நிவேதா அங்குள்ள கோணாவட்டம் பகுதியை சார்ந்த வாலிபருடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்த நிலையில்., இருவரும் அலைபேசியில் பேசி வந்துள்ளனர். இந்த சமயத்தில்., மருத்துவமனை உதவியாளருடன் நிவேதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு வாலிபர்களும் நிவேதாவை காதலித்து வந்த நிலையில்., இருவருக்கும் ஏற்பட்ட காதல் தகராறில் நிவேதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில்., இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

love, love images, couple love,

மேலும்., நிவேதாவிடம் பேசி வந்த நண்பர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்., இவரது இரு சக்கர வாகனம் சி.எம்.சி மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட நிலையில்., இவரது அலைபேசி மாயமாகியுள்ளது. இது தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் 4 பேரை கைது விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் முதற்கட்ட விசாரணையில் வெளியான நிலையில்., தற்போது சிறுமி கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 

இந்த விசாரணையில்., ரெங்கபுரத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரகாஷ் என்பவனை சிறுமி கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில்., இருவரும் அவ்வப்போது தனிமையில் ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில்., திடீரென பிரகாஷ் சிறுமியிடம் இருந்து விலகிக்கொள்ள துவங்கியுள்ளான். மேலும்., சிறுமி கேண்டினில் பணியாற்றி வரும் நபருடன் நட்பு ரீதியில் பழகி வந்த நிலையில்., இது பிரகாஷிற்கு பிடிக்க வில்லை என்று தெரியவருகிறது. சிறுமி பிரகாஷை காதலித்து வந்த நிலையில்., பிரகாஷிடம் திருமணம் செய்து கொள்ள கூறி வரபிருதி வந்துள்ளான். 

சிறுமி மாயமான சம்பவத்தன்று தனது துணிகள்., பள்ளி சான்றிதழ் போன்றவற்றை எடுத்து கொண்டு காதலன் பிரகாஷை கரம் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்த நிலையில்., சிறுமியின் மீது சந்தேகம் கொண்ட கொடூரன் பிரகாஷ் தனது உறவினர் நவீன் என்ற நபரின் உதவியோடு சிறுமியை புதுவசூர் கல்குவாரிக்கு அழைத்து சென்று மலை உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்ததும்., சிறுமியின் கைப்பை மற்றும் அலைபேசியை கல்குவாரி குட்டையில் வீசி சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore girl murder by love boy due to confirm marriage request


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal