அழகிய பேச்சு.. கருணை உள்ளம்.. முதியவரின் இச்சை.. பேத்தியை பறிகொடுத்த பரிதாபம்.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகேயுள்ள அரசன்காடு பகுதியை சார்ந்தவர் மாரி (வயது 62). மாரியுடைய மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், இவரது மகன் சுடலை ராஜா மற்றும் இரண்டரை வயது பேத்தி மகாலட்சுமி ஆகியோருடன் மாரி வசித்து வந்துள்ளார். 

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மருமகள் இசக்கி, தனது கணவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மாரி மற்றும் சுடலைராஜா இப்பகுதியில் கார் வர்ணம் பூசும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், மாரி கடந்த வியாழக்கிழமையன்று வேண்டுதலை நிறைவேற்ற பேத்தியுடன் பழனி முருகன்கோவிலுக்கு சென்றுள்ளார். 

முருகன் கோவிலில் வேண்டுதலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த வேலையில், பழனி பேருந்து நிலையத்தில் இருந்த 35 மதிக்கத்தக்க பெண்ணொருவர் பேச்சுக்கொடுத்து, தன்னை ஆதரவற்றவர் என்று கூறி, வீட்டில் அடைக்கலம் கொண்டுதான், வீட்டு வேலைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பெண் பார்ப்பதற்கு அழகாகவும், பேச்சில் கருணையும் கொண்டு இருந்ததால் பெயரை கூட கேட்காது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும், இந்த நேரத்தில் சுடலை ராஜாவும் பணி விஷயமாக வெளியூருக்கு சென்றுவிட்டதால் மதுவை வாங்கி வந்து குடித்துவிட்டு, பெண்ணுடன் உல்லாசமாக இருந்து போதை மயக்கத்தில் உறங்கியுள்ளார். 

பின்னர் மாலை நேரத்தில் கண்விழித்து பார்த்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியாக பெண்ணும், குழந்தையும் காணவில்லை. இதனையடுத்து இருவரையும் அங்குள்ள பல பகுதிகளில் தேடியும் காணாததால் மகனிற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்த சுடலை ராஜா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்துள்ளனர். காவல் துறையினரின் சோதனையில் பெண் குழந்தையை அழைத்து கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைத்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in thirupur child kidnapped by woman police investigate


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->