பெண்ணை கற்பழிக்க முடியவில்லை.. ஆத்திரத்தில் கொலை செய்தோம்.! கைதான தலித் இளைஞனின் பரபரப்பு வாக்குமூலம்.!!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஓடைத்தெரு பகுதியை சார்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவியின் பெயர் சாந்தி. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில்., தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கு உதவியாக சாந்தி வேலை பார்த்து., அவரது வாழ்க்கையை நடத்தி வருகிறார். 

இதன் காரணமாக இவர் வீட்டுக்கு செல்லாமல் சந்தையிலே இருக்கும் பகுதியில் தூங்குவது வழக்கம். இந்த நிலையில்., இவர் கடந்த 22 ஆம் தேதி அன்று அதிகாலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்., அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் விஜய் ரசிகர்கள் சார்பில் சுவரொட்டி ஒட்டபட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சுவரொட்டி ஒட்டிய பணியாளர்களிடம் விசாரணை செய்த நிலையில்., அவர்கள் சுவரொட்டியை ஒட்டிவிட்டு சம்பவ இடத்தில் எந்த விதமான தவறும் செய்யாமல் சென்றது தெரியவந்தது. 

அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்த நிலையில்., தேனி அல்லிநகரம் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் நடுத்தெருவுக்கு பகுதியை சார்ந்த சக்திவேல் என்பவனின் மகன் மோகன் ராஜ் மற்றும் அவனது நண்பன் ஆட்டோ ஓட்டுனரான கணேசன் என்பவரின் மகனான மணிகண்டன் என்பவரும் சாந்தியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

இது குறித்த விசாரணையில்., நாங்கள் இருவரும் கடந்த 21 ம் தேதியன்று மது அருந்துவதற்காக அங்குள்ள கண்மாய் பகுதிக்கு சென்று மது அருந்தி மீண்டும் ஆட்டோவை நிறுத்த சந்தைக்கு வந்த நிலையில்., சாந்தி உறங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை கற்பழிக்க முயன்ற நேரத்தில் அவர் சத்தம் போடவே இருவரும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni girl try to rap and killed by dalith younger police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->