கணவனின் இரண்டாவது திருமணம்.. முதல் மனைவியை கொடூரமாக துன்புறுத்திய குடும்பம்.. தாய் பாசத்தால் பரிதாபமாக துடிதுடித்து பறிபோன உயிர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தனமாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் முனீஸ்வரன். இவர் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியை சார்ந்தவர் சுப்புலட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இவர்களுக்கு சியாமிலா என்ற 6 வயதுடைய பெண் குழந்தை மற்றும் 3 வயதுடைய ராஜேஷ் என்கிற ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், முனீஸ்வரன் இராணுவத்தில் பணியாற்றி வருவதால் பெற்றோரின் இல்லத்தில் தங்கவைத்துவிட்டு, விடுமுறைக்கு வரும் நேரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசி வந்துள்ளார். இதனைப்போன்று சமீபத்தில் முனீஸ்வரன் ஊருக்கு வந்த நிலையில், சுப்புலட்சுமி இரவு தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இவர் குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறி முனீஸ்வரன் அழுதுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த போடி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மகளின் இறப்பில் மர்ம உள்ளது என்று கூறி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.
 
இந்த விசாரணையில், சுப்புலட்சுமி கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. மேலும், முனீஸ்வரனிற்கும் - மற்றொரு பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில், அதே பெண்ணையே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், அப்பெண் கற்பமாகவே, அவருக்கு வளைகாப்பு நடத்துவதற்கு முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டம் தீட்டியுள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்த சுப்புலட்சுமி கணவரை கண்டிக்கவே, வளைகாப்பிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து சுப்புலட்சுமியின் கழுத்தை துண்டால் இறுக்கி அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இந்த கொலையை மறைக்க குடும்பமே சேர்ந்து நாடகம் ஆடியதும், இக்கொலைக்கு உறுதுணையாக இருந்த முனீஸ்வரனின் தந்தை ராஜு (வயது 65), தாயார் மாரியம்மாள் (வயது 55), சகோதரர் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகரன், உறவினர் பாலமுனீஸ் மற்றும் அன்னலட்சுமி ஆகியோரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான முனீஸ்வரன் தலைமறைவான நிலையில், காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், கடந்த இரண்டு வருடமாக முனீஸ்வரனின் குடும்பத்தினர் சுப்புலெட்சுமியை துன்புறுத்தி வந்த நிலையில், சரிவர வீட்டு செலவிற்கு பணம் அனுப்பாமல் இருந்து வந்ததால் தனது குழந்தைகளை காப்பாற்ற நூறுநாள் பணிக்கு சுப்புலட்சுமி சென்று வந்துள்ளார். இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் தன்னை அதிகளவு துன்புறுத்தி வந்தது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். குழந்தைகளை தாயுடன் முனீஸ்வரனின் குடும்பத்தினர் அனுப்ப மறுப்பு தெரிவித்ததால் தாய் பாசத்தில் குழந்தையுடன் இருந்ததே கொலைக்கு வித்திட்டுள்ளது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Theni girl murder by husband and his family by torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal