பெட்ரோல் லாரி விபத்துக்குள்ளாகி., வழிந்தோடிய பெட்ரோலை எடுக்க சென்ற 62 பேர் உடல் கருகி பலி.. 55 பேர் உயிர் ஊசல்..!! விழிப்புணர்வு தேவை..!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல விதமான விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அறிக்கைகளின் முடிவின்படி நொடிக்கு பல்வேறு விபத்துகள் சராசரியாக நடைபெறுகிறது. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி நாம் பயணித்தாலும்., எதிர்பாராத சூழ்நிலையின் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு., பரிதமாக உயிரும் பலியாகி வருகிறது. 

தான்சானியா நாட்டில் தலைநகராக இருந்து வரும் தாரிஸ் ஸலாமில் இருந்து மேற்கு திசையில் சுமார் 200 கிமீ தூரத்தில் அமைத்துள்ள பகுதி மொரோகோரோ. இந்த பகுதியில் சென்று கொண்டு இருந்த பெட்ரோல் டேங்கர் லாரியானது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள்., கைகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு பெட்ரோலை பிடித்து கொண்டு இருந்தனர். 

Tanzania, தான்சானியா, Tanzania fuel tanker accident,

இந்த நேரத்தில்., எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடிக்கவே., டேங்கர் லாரி வெடித்து சிதறியது. எதிர்பாராமல் நடத்த இந்த கோர விபத்தில்., பெட்ரோலை எடுத்துக்கொண்டு இருந்த 62 பேர் உடல் கருகி சம்பவ இடத்தியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 65 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமனந்து உயிருக்கு போராடி துடித்தனர். 

Tanzania, தான்சானியா, Tanzania fuel tanker accident, morongoro,

பின்னர் இது குறித்து அங்குள்ள மக்கள் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இந்த விபத்திற்கு அரசு தரப்பிலும் இரங்கல் செய்தி விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் இருந்து நாம் அறிய வேண்டியது உள்ளது. நமது தமிழகத்திலும் இதனை போன்ற ஒரு லாரி விபத்து நடந்ததும் நாம் அறிந்து மறந்ததே.. அந்த இடத்தில் நல்ல வேலையாக எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இலவச எரிபொருளுக்கு ஆசைப்பட்டு நமது விலைமதிக்க முடியாத உயிரை இழக்க கூடாது.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Tanzania fuel tanker blasts atleast 62 peoples died 55 peoples injuries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->