திருட வந்த வீட்டில் வசமாக சிக்கிய திருடன்.. துண்டு சீட்டை வைத்து வடிவேல் போல பிளான் பண்ணி, பஸ்ட் ஆன சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகேயுள்ள மருதுபாண்டியர்நகர் ஆனந்தா நகரில் வசித்து வரும் நபர் அமல்ராஜ் கென்னடி (வயது 50). இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் பணியாற்றி வரும் பள்ளியில் நேற்று முன்தினம் மாலைநேரத்தில் பள்ளியின் ஆண்டுவிழாவானது நடைபெற்றுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், இந்த விஷயத்தை அறிந்து கொண்ட முகமூடி அணிந்த கொள்ளையன் இரவு நேரத்தில் அமல்ராஜுடைய வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான். இவனது திட்டப்படி பூட்டினை உடைக்க திருடன் முயற்சித்துள்ளான். அமல்ராஜின் இல்லத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ள நிலையில், இதனை அவரது அலைபேசியுடன் இணைத்துள்ளார். 

திருடன் வீட்டின் பூட்டினை உடைத்துக்கொண்டு இருந்த நேரத்தில், இவரது அலைபேசியில் முன்னெச்சரிக்கையாக பொருத்தி வைக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலமாக எச்சரிக்கை அமைப்பு ஒலிக்கவே, இதனையடுத்து இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவரது வீட்டிற்கு வந்த பொதுமக்கள் திருடனை வீட்டின் உள்புறம் வைத்து பூட்டியுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரைக்குடி காவல்துறையினர் திருடனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில், திருட வந்தவன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியை சார்ந்த ராபின் (வயது 30) என்பதும், பல்வேறு இடங்களில் திருடிவிட்டு சிறைக்கு சென்றவன் என்பதும் தெரியவந்தது. 

மேலும், இவனின் மீது சுமார் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தின் போது ஜாமினில் வெளியே வந்துள்ளான். இதன்பின்னர் தலைமையாசிரியரின் இல்லத்தில் திருட முயற்சித்து சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், பள்ளி ஆண்டுவிழா தொடர்பான தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்ட நிலையில், இதனை அறிந்து திருடன் திட முயற்சித்தும் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sivakangai thief arrested by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->