அரசியலுக்காக.. விஜயின் அடுத்த டார்கெட் நியூஸ் சேனல்! வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

அதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணிக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பல்வேறு மக்கள் நல பணிகளையும் தீவிர படுத்தியுள்ளார். இதற்கிடையே நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரியின் அடுத்த கட்டமாக பிரபல செய்தி ஊடகத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு ஊடகங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே அதன் வளர்ச்சியும் அமைந்துள்ளது.

அந்த வகையில் தனது அரசியல் வளர்ச்சிக்காக நடிகர் விஜய் ஏற்கனவே இருக்கும் செய்தி தொலைக்காட்சியை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும் சத்தியம் எனும் தனியார் செய்தி சேனலை வாங்க உள்ளதாக சமூக தலைவளமான எக்ஸ்ஸில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயின் அடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அவர் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலேயே தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை இருக்கக்கூடிய வகையில் அவருடைய செயல்பாடுகள் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In report ActorVijay is going to buy news channel


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->