தோழியின் தந்தை இறுதிச்சடங்கிற்கு செல்ல மறுப்பு தெரிவித்த தந்தை.. அதிர்ச்சி முடிவெடுத்த இளம்பெண்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சார்ந்தவரின் பெயர் சுந்தர் ராஜ். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மகளின் பெயர் பிரியா (வயது 24).

இவர் துபாயில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு மீண்டும் கோத்தகிரிக்கு வந்துள்ளார். இந்த தருணத்தில்., துபாயில் இவருடன் பெண்ணொருவர் பணியாற்றி வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக பழகி வந்த நிலையில்., பிரியாவுடைய தோழியின் இல்லம் சென்னையில் இருந்துள்ளது. இந்நிலையில்., இவரது தோழியின் தந்தை திடீரென இறந்துவிட்டதால்., இறுதிச்சடங்கிற்கு சென்றுள்ளதால் தந்தையிடம் அனுமதி கோரியுள்ளார். 

இதனை கேட்ட தந்தை தற்போது இரவு நேரமாக இருப்பதால் தனியாக செல்ல முயற்சி செய்ய வேண்டாம் என்றும்., நாளை காலை புறப்பட்டு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பெண்மணி பூச்சி மருந்து குடித்துள்ளார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் மயக்கமடையவே., வாயில் நுரைதள்ளி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்த நிலையில்., சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Nilgiris girl attempt suicide police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal