நாடககாதலில் விழுந்து 8 மாத கர்ப்பிணியான பெண்.! மனமுடைந்து எடுத்த இறுதி முடிவு.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேனிகனிக்கோட்டை பகுதியை அடுத்துள்ள பஜேபள்ளி பகுதியை சார்ந்தவர் நாகராஜ். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 20 வயதுடைய மீனா என்ற மகள் உள்ளார். 

இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில்., அதே பகுதியில் உள்ள மருந்தகத்தில் அங்குள்ள பாடினாளாம் பகுதியை சார்ந்த 27 வயதுடைய சந்திர சேகர் என்ற வாலிபன் பணியாற்றி வந்துள்ளான். 

இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு வட்டாரத்தில் ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த நிலையில்., அடிக்கடி தனிமையில் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த சமயத்தில் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை தொடர்ந்து மீனா கர்ப்பமடைந்துள்ளார். 

தான் கர்ப்பமாக இருக்கும் நிலையை அறிந்த மீனா., தனது காதலரான சந்திரசேகரிடம் சென்று கர்ப்பமாக இருக்கும் செய்தியை தெரிவித்து., திருமணம் செய்து கொள்ள கூறி முறையிட்டுள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ளாத கொடூர காதலன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிக்கவே., மனமுடைந்த மீனா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். 

இவரை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மீனாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., மீனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீனா 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மீனாவிடம் விசாரணை மேற்கொண்டு., சந்திரசேகரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

in krishnagiri girl rapped by her lover


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal