இந்தியாவை உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை.! அதிரடியில் சி.பி.சி.ஐ.டி..!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் கடந்த 1998 ஆம் வருடத்தின் போது தொடர் குண்டு வெடிப்பு சம்பவமானது அடுத்தடுத்து அரங்கேறியது. மேலும்., கடந்த 1998 ஆம் வருடத்தின், பிப்ரவரி மாதத்தின் போது நடைபெற்ற கொடூர தாக்குதலில் பல அப்பாவி மக்கள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இந்த சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் தற்போது வரை சுமார் 130 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்., இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் கோயம்புத்தூரை சார்ந்த பாஷா மற்றும் அன்வர் முக்கிய குற்றவாளியின் கீழ் சேர்க்கப்பட்டு., இவர்களுக்கு ஆயுள் தண்டனையும்., பிறருக்கு 10 வருடங்கள் முதல் 7 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையில் தற்போது 14 பேர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள நிலையில்., வழக்கில் கைதான சிலர் மேல்முறையீடு செய்து விடுதலை ஆகினர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் தலைமறைவான நிலையில்., கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சார்ந்த சாதிக் என்ற ராஜா (வயது 43)., முஜிபுர் ரகுமான் என்ற முஜி (வயது 50) ஆகியோர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். 

கோவை குண்டுவெடிப்பு, kovai bomb blast,

இவர்களை காவல் துறையினர் தேடிக்கொண்டு வரும் நிலையில்., வருடக்கணக்கில் தேடி வரும் இவர்களின் புகைப்படங்கள் தற்போது கிடைத்துள்ளது. இவர்கள் குறித்த விபரங்களை அறிந்த நபர்கள் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில்., ரூ.2 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் கடந்த முயன்று நாட்களுக்கு முன்னதாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர். 

தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்துள்ள நிலையில்., தமிழகத்தின் சென்னை., கோயம்புத்தூர்., திருச்சி., மதுரை போன்ற இடங்களை மையமாக கொண்டு தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் புகைப்படம் கேரள., கர்நாடக., ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையத்திலும் இவர்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kovai bomb blast CBCID investigation seriously


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->