குழந்தையை பெற்றெடுத்து விற்பனை செய்யும் கும்பல்?..! மதுரை - கோவையில் நடைபெறுவது என்ன?..!! வெளியாகும் பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியை சார்ந்தவர் ஜாகிர். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கு தெரிந்த தம்பதிக்கு குழ்நதை தேவை என்று கூறி., குழந்தையை விற்பனை செய்யும் கும்பலை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இந்த நேரத்தில்., குழந்தை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நாமக்கல் ராசிபுரம் பகுதியை சார்ந்த ஹசீனா மற்றும் அவரது தோழியான கல்யாணி ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. 

இவர்களை தொடர்பு கொண்ட ஜாகிர் தனக்கு குழ்நதை வேண்டும் என்று கூறவே., ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்டு ரூ.2 இலட்சத்திற்கு பேரம் பேசி குழந்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் குழந்தை கடத்தல் கும்பல் ஹசீனா மற்றும் கல்யாணி ஆகியோர் சேர்ந்து மதுரையை சார்ந்த கண்ணன் - ஜோதி தம்பதியினரின் குடும்ப சூழ்நிலையை அறிந்து., அவர்களுக்கு பிறந்திருந்த 40 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை விற்க சம்மதம் தெரிவித்து பேசி முடித்துள்ளனர். 

இதனையடுத்து கண்ணன் - ஜோதி தம்பதியை கருத்தம்பட்டிக்கு வர சொல்லிய நிலையில்., இருவரும் கருத்தம்பட்டிக்கு வந்துள்ளனர். மேலும்., ஆட்டோ ஓட்டுநர் என மூவரும் கருத்தம்பட்டியில் இருந்து சூலூருக்கு வரவழைக்கப்பட்ட பின்னர் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில்., ஆட்டோ ஓட்டுநர் ஜாகிர் வந்ததற்கு பின்னர் குழந்தையை தர்ருது அதிக பணம் கேட்டுள்ளனர். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையானது வாக்குவாதமாக மாறவே பெற்ற குழந்தையை கொடுத்த தம்பதி புறப்பட்டு செல்ல., குழந்தையை விற்பனை செய்யும் கும்பலை சார்ந்த ஹசீனா மற்றும் கல்யாணி - ஆட்டோ ஓட்டுநர் ஜாகிர் குடும்பிபிடி சண்டையிட்டுள்ளனர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சென்று விசாரித்த நேரத்தில் மூவரும் மாறி மாறி பதில் அளித்ததை அடுத்து., பொதுமக்கள் சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு மூவரையும் அழைத்து சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தை விற்பனை தகவல் அதிர்ச்சியாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்டு ஐவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் ஏற்கனவே கண்ணன் - ஜோதி தம்பதியினர் குழந்தையை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இக்கும்பல் குழந்தையை யாருக்கு விற்பனை செய்ய வந்தனர்? இதனைப்போன்று எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது? என்பது குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Coimbatore child kidnapped and sales gang arrest by police


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->