ஒரேநாளில் 17 குழந்தைகள் டெங்குவால் பாதிப்பு.. மருத்துவமனைக்கு விரையும் பெற்றோர்கள்.. அலட்டாகும் மாவட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பாதிப்பானது தினமும் அதிகரித்து வந்துள்ளது. மேலும்., காய்ச்சல்கள் பரவாமல் இருப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்., காய்ச்சலின் தாக்கமானது குறையாமல் இருந்து வருகிறது. 

மேலும்., கடந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட தற்போதைய உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பினும்., காய்ச்சலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும்., நேற்று ஒரேநாளில் 16 குழந்தைகள் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலின் பாதிப்பால் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

coimbatore, coimbatore railway station, tirupur, tirupur railway station,

கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த 10 குழந்தைகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த 6 குழந்தைகள் என மொத்தமாக 16 பேர் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமல்லாது டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை 17 பேரும்., வைரஸ் காய்ச்சலுக்கு 157 பேரும் என மொத்தமாக சுமார் 174 பேர் அனுமதியாகியுள்ளனர். 

இந்த விஷயம் குறித்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை தலைமை நிர்வாகி தெரிவித்த சமயத்தில்., முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இவர்களை காய்ச்சல் எளிதாக தாக்கிவிடும். தற்போது கோயம்புத்தூர் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள அனைவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு அனுமதியாகி வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore and tirupur child injured dengue fever


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->