கோவையில்., சரிவர வேலை கிடைக்காமல்., குடும்பத்தின் நிலையை எண்ணி வருந்தி வாலிபர் எடுத்த முடிவால் சோகத்தில் உறவினர்கள்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பட்டியில் உள்ள கென்னடி நகரை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மகனின் பெயர் சிவசங்கர் (30). 

இவர் அதே பகுதியை சார்ந்த பூர்ணிமா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று., தற்போது 11 வயதில் மகன் ஒருவர் உள்ளார். 

இந்நிலையில்., அதிகளவு கடனுக்கு உள்ளான இவருக்கு., கடந்த சில நாட்களாகவே கடன் பிரச்சனையால் அவதியடைந்த அவருக்கு வேலையும் சரிவர கிடைக்காததால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர் செய்வதறியாது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் அருந்தியுள்ளார். விஷத்தின் வீரியம் தாங்காமல் வயிற்று வலியால் சிறிது நேரத்தில் அலறித்துடிக்க துவங்கினார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்., மேலும்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore a man attempt suicide due to poorness


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal