இளம்பெண் பட்டப்பகலில் ஆட்டோவில் கடத்தல்.. சுதாரித்த இளைஞர்கள்.. அரங்கேறிய சோகம்..! சென்னையில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுமார் 6 மணியளவில் மாரிமங்கலம் கிராமத்தினை சார்ந்த 27 வயதுடைய பெண்மணி அங்குள்ள நரசிங்கபுரம் செல்வதற்காக சாலையில் காத்திருந்துள்ளார். 

இந்நேரத்தில் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் இளம்பெண் பயணத்தை துவக்கிய நிலையில்., இவருடன் சக பயணிகளும் பயணம் செய்துள்ளனர். சக பயணிகள் வழியிலேயே இறங்கிவிட்ட நிலையில்., பெண் மட்டும் தனியாக வாகனத்தில் இருந்ததை அடுத்து., ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை அங்குள்ள கொண்டஞ்செரி பகுதியில் இருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் செலுத்தி வாகனத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார். 

இதனையடுத்து பதற்றமடைந்த பெண்மணி சுதாரித்து வாகனத்தை நிறுத்த கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் முறையிட்ட நிலையில்., ஆட்டோ ஓட்டுநர் ஏதும் கண்டுகொள்ளாது வாகனத்தை இயக்கியுள்ளார். விபரீதத்தை அறிந்த பெண்மணி வாகனத்தில் இருந்தவாறு கூச்சலிடவே., இந்த சூழ்நிலையில் ஆட்டோ சென்று கொண்டு இருந்த கொண்டஞ்சேரி இளைஞர்கள் இதனை கவனித்துள்ளனர். 

இதனை கவனித்த அப்பகுதி இளைஞர்களான யாகேஷ் (வயது 22) மற்றும் அவரது நண்பர்களான எஸ்தர் பிரேம்குமார்., வினீத்., துரைராஜ்., சார்லி பிராங்க்ளின் ஆகியோர் தங்களின் இரு சக்கர வாகனத்தில் ஆட்டோவினை துரத்தியுள்ளனர். இதனை கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவின் வேகத்தினை மீண்டும் அதிகரிக்கவே., எதிரில் வந்த வாகனத்திற்கு வழிவிட ஆட்டோ ஓட்டுநர் வேகத்தினை குறைந்துள்ளான். 

இந்த சமயத்தில் சுதாரித்த பெண்மணி ஆட்டோவில் இருந்து கீழே குதிக்கவே., காயமடைந்த பெண்மணியை யாகேஷின் நண்பர்கள் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வைத்துள்ளார். மேலும்., ஆட்டோ ஓட்டுனரை பிடிக்கும் பொருட்டு யாகேஷ் மற்றும் அவரது நண்பர் சார்லி ஆட்டோவினை துரத்தி செல்லவே., இரு சக்கர வாகனத்தை மோதிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தப்பி சென்றுள்ளான். 

died, murder, killed, suicide attempt,

இந்த விபத்தில் படுகாயமடைந்த யாகேஷை அங்குள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில்., சனிக்கிழமை யாகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைத்தொடர்ந்து இது தொடர்பான தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிஞ்சிவாக்கம் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் கேசவன் என்பவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai man died help for saving girl life


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->